அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்(அ) கங்கைகொண்ட சோழபுரம் கோவில்

Gangai-Konda-Cholapuram_temple


சுவாமி : பிரகதீஸ்வரர்.

அம்பாள் : பெரியநாயகி.

தீர்த்தம் : சிம்மக் கிணறு.

தலவிருட்சம் : பின்னை, வன்னி மரம்.

தலச்சிறப்பு : கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை  வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும்.  இக்கோவிலின்  வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன.  அவை முறையே  "வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும்.  வடகைலாய கோவிலில்  பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை  ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது.  இங்கு  மூலஸ்தானத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது.  தினமும் பகலில் இந்த நந்தியின்  மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும்  சிறப்பு.  மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப்  பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்து உள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.  கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது.  கருவறையில் உள்ள  லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும்.  குளிர்  காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும்.  பெரிய நாயகி அம்மன்  பெயருக்கு  ஏற்றார் போல் 9.5 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறாள்.  இங்கு உள்ள நவக்கிரகம்  மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக  அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு : இராசேந்திர சோழனால் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது.  1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும்  வென்று கங்கையையும் வென்றான்.  அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற  பட்டப்பெயர் கொண்டான்.  மேலும் கங்கை கொண்ட சோழேஸ்வரம் என்ற சிவன் கோவிலையும்  கட்டினார்.  இவனுக்குப் பிறகு வந்த சோழர்கள் இந்நகரத்தையே தலைநகராகக் கொண்டு ஆண்டு  வந்தனர்.  கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி  அமைக்கப்பட்டது.  கங்கையை வெற்றி கொண்டு அந்த கங்கை நீரினைக் கொண்டு வந்து "பொன்னேரி" எனும் சோழ கங்கை பேரேரியில் ஊற்றினான்.  இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

மாசி சிவராத்திரி,

ஐப்பசி பௌர்ணமி,

பங்குனித் திருவிழா,

மார்கழி திருவாதிரை.

அருகிலுள்ள நகரம் : ஜெயங்கொண்டம்.

கோயில் முகவரி : அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்,

கங்கை கொண்ட சோழபுரம்- 621 901, அரியலூர் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1.ஸ்ரீ ராம் லாட்ஜ்,

பஸ் ஸ்டாண்ட் ரோடு,

ஜெயங்கொண்டம்,

Ph : 04331250521.

 

2.சுபா லாட்ஜ் ஏ/சி,

27, பஸ் ஸ்டாண்ட் ஜெயங்கொண்டம்.

 

3.குமரன் லாட்ஜ்,

சிதம்பரம் ரோடு,

ஜெயங்கொண்டம்,

Ph : 250218.

 

4.பி.வி.ஆர் லாட்ஜ்,

கடைவீதி,

ஜெயங்கொண்டம்,

Ph : 250950.

 

5.முருகன் லாட்ஜ்,

சிதம்பரம் ரோடு,

ஜெயங்கொண்டம்,

Ph : 250401.

அருகில் உள்ள உணவகங்கள் :

1.ஹோட்டல் சுந்தரம்,

64/127-A, திருச்சி ரோடு,

டி.என்.இ.பி. ஆபீஸ்,

ஜெயங்கொண்டம் - 621 802,

Ph : (04331) 253516.

 

2.காமாட்சி ரெஸ்டாரன்ட்,

3, ஈஸ்வரி காம்ப்ளெக்ஸ்,

ஒதா ஸ்ட்ரீட்,

ஜெயங்கொண்டம் மெயின் பஸ் ஸ்டாண்ட்,

ஜெயங்கொண்டம் - 621 802,

Ph : (04331) 250800.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
வீரநாராயண பெருமாள் 
1.5km

பயரணீஸ்வரர் 
18.8Km

கலியபெருமாள் 
42.1Km
ஆஞ்சநேயர் 
20.2Km
பசுபதீஷ்வர சுவாமி 
20.4Km
வஜதம்பெஸ்வரர் 
16.9Km