அருள்மிகு சுப்பிரமணிய சுவாமித் திருக்கோவில் (குமரகோட்டம்)

காஞ்சிபுரம் 

Kumara-kottam


சுவாமி : அருள்மிகு சுப்பிரமணிசுவாமி.

அம்பாள் : வள்ளி, தெய்வானை (உற்சவர்)

தல வரலாறு : ஒரு முறை பிரமன் கயிலாயத்திலே எம்பெருமானைத் தரிசித்து விட்டு திரும்பும் வழியில் முருகப் பெருமானைப் பார்த்தும், பார்க்காததுப் போல் சென்றான். இதனால் கோபமுற்ற முருகப்பெருமான் பிரம்மனை அழைத்து நீ யார் ? நீ இருப்பது எந்த இடம் ? நீ செய்யும் தொழில் என்ன ? உனக்கு எந்த நூல் தெரியும் ? சொல்லும் என்றார். அதற்குப் பிரம்மன் என் பெயர் பிரம்மன். உங்கள் தந்தையார் எனக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்து உலகத்தைப் படைக்கக் கட்டளையிட்டார். அப்பணியைச் செய்து கொண்டு சத்தியலோகத்தில் வாழ்ந்து வருகிறேன் எனக் கூறினார்.நல்லது பிரமனே, எல்லாக் கலைகளையும் இறைவனிடம் இருந்து தெரிந்து கொண்டாய் அல்லவா ? அப்படியானால் இக்கலைகளுக்கு முன்னே சொல்லப்படும் எழுத்து என்ன ? அதன் பொருள் என்ன ? என்று கேட்டார்.அதற்குப் பிரமன், ஐயனே, அந்த எழுத்தையும் அதன் பொருளையும் யான் அறியேன், என்மீது கருணை செய்ய வேண்டும் என்றான். இதைக் கேட்ட முருகப்பெருமான் கோபம் கொண்டு “ஓம்” என்னும் பிரவணத்தின் பொருள் அறியாத இவனைச் சிறையிலிடுமாறு ஆணைப் பிறப்பித்தார். அதன்பின்பு சுப்பிரமணியர் பிரமனைப் போன்று ருத்திராட் மாலை, கமண்டலம் கொண்டு படைப்புத் தொழிலை மேற்கொண்டார். இத்திருக்கோவிலில் தற்போது உள்ள மூலவர் சுப்ரமணியர் கைகளில் ருத்திராட்ச மாலை,கமண்டலம் கொண்டுள்ளார்.இப்புராணம் அரங்கேறியதுபோது எழுந்த சந்தேகத்தையும் முருகனே தீர்த்து வைத்தான். கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இன்றும் இங்கு நல்ல நிலையில் உள்ளது. (11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்டபமாகும்).இவ்வாலயம் இருக்கும் இடம் தெரியாமல் சென்ற பாம்பன் சுவாமிகளைச் சிறுவனாகச் சென்று வழிகாட்டி, அழைத்து வந்து தரிசனம் செய்வித்துப் பாடலையும் பெற்றான் இத்தலத்து முருகன்.

நடைதிறப்பு : காலையில் 7.00 மணிமுதல் 12.00 வரையிலும்,மாலையில் 3.30 மணிமுதல் இரவு 8.00 மணி வரையிலும் 

அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம் 

கோயில் முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமித் திருக்கோவில் ,(குமரகோட்டம்) காஞ்சிபுரம். காஞ்சிபுரம் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஜி.ஆர்.டி ரெசிடென்சி காஞ்சிபுரம்,

487, காந்தி ரோடு,

காஞ்சிபுரம் - 631 502,

+(91)-44-27225250, +(91)-9940184251.

 

2. எம். எம் ஹோட்டல்,

No. 65 - 66, நெல்லுகார ஸ்ட்ரீட்,

காஞ்சிபுரம் - 631 502,

Ph : +(91)-44-27227250, +(91)-8098827250.

 

3. "ஹோட்டல் பாபு சூர்யா No. 85,

ஈஸ்ட் ராஜா ஸ்ட்ரீட் காஞ்சிபுரம்,

காமாட்சி அம்மன் கோவில் எதிரில்,

காஞ்சிபுரம் - 631 501, 

Ph : +(91)-44-27222556, +(91)-9597121214.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. சரவண பவன் 66,

அன்னை இந்திரா காந்தி ஸ்ட்ரீட்,

காஞ்சிபுரம் - 631502,

Ph : 4427226877.


2. ஹோட்டல் சரவண பவன் 504,

காந்தி ரோடு,

இந்தியன் ஓவர்சிஸ் பாங்க எதிரில்,

காஞ்சிபுரம்


3. ஹரிடம் என்.ஹெச் - 45

தென்பாக்கம் கிராமம்,

காஞ்சிபுரம் - 603301, Ph :044 27522336.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

 

Nearby Temple

 


பண்டவதூதர்
2கிமீ

வைகுந்தவல்லி
650மீ

பவளவல்லி
1.1கிமீ

கச்சபேசுவரர்
950மீ

உலகளந்த பெருமாள்
750மீ

காமாட்சியம்மன்
1கிமீ