அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
திருமணிக்கூடம், திருநாங்கூர்

 

Varadaraja_perumal_temple

 

சுவாமி : வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்).

அம்பாள் : திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவிபூதேவி).

மூர்த்தி : கருடாழ்வார், நம்மாழ்வார்.

தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.

தலச்சிறப்பு : பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 37வது தலம் ஆகும்.  இத்தலத்தின் உள்ளே சென்றதும் பலிபீடம்,  கருடாழ்வார் சன்னதி உள்ளது.  மகாமண்டபம், அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் மூலவர் வரதராஜப் பெருமாள் தாமரை  பீடத்தின் மீது நின்ற கோலத்தில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.  பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை  பீடத்தின் மீது நின்றபடி ஸ்ரீதேவியும், இடது புறத்தில் பூமா தேவியும் காட்சியளிக்கிறார்கள்.  அருகிலேயே உற்சவமூர்த்தி அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டுதோறும் தை  அமாவாசை மறு தினம் திருநாங்கூர் மணிமாட கோவிலில் 11பெருமாள்களும் எழுந்தருளும் கருட சேவை உத்சவம் நடைபெறும்.   11பெருமாள்களில் ஒருவரான திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் தங்க கருடவாகனத்தில் திருநாங்கூர் கருடசேவைக்கு எழுந்தருள்வார்.  தீராத நோய்கள் எல்லாம் திருமணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

தல வரலாறு : தக்கனுக்கு 27 மகள்கள் இருந்தனர்.  சந்திரன் தக்கனின் 27 மகள்களையும் திருமணம் செய்து கொண்டார்.  சந்திரன்  தன் 27 மனைவியிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் வாக்கு கொடுத்தான்.  ஆனால் சந்திரன் ரோகிணியிடம்  மட்டுமே மிகுந்த அன்புடன் இருந்தான்.  இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையான தக்கனிடம் முறையிட்டனர்.  தக்கன்  கோபம் கொண்டு சந்திரனுக்கு "உன் அழகும், ஒளியும் தினமும் குறையட்டும்”, என சாபம் கொடுத்தார்.  சாபத்தின் காரணமாக  முழு சந்திரன் நாளுக்கு நாள் தேய தொடங்கினான்.  சாபம் நீங்க பல தலங்களுக்கு சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு  வந்தான்.  இத்தலத்தில் பெருமாள் வரதராஜனாக காட்சி தந்து சந்திரனின் சாபம் நீக்கி வரமளித்தார்.

வழிபட்டோர் : கருடாழ்வார், சந்திரன்.

பாடியோர் : திருமங்கையாழ்வார்.

பூஜை விவரம் : காலை 06.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை.

திருவிழாக்கள் : வைகுண்ட ஏகாதசி.

அருகிலுள்ள நகரம் : சீர்காழி.

கோவில் முகவரி : அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில்,

திருமணிக்கூடம் - 609 106, திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1.சோழா இன்,

105, பிடாரி சவுத் ஸ்ட்ரீட்,

தென்பதி,

சிர்காழி - 609 111,

Ph : 094444 93388.

 

2.ஐயர்பாடி ஹோட்டல்,

ஓல்ட் என்.ஹெச்,

தென்பதி,

சீர்காழி - 609 110.

 

3.ஹோட்டல் ஆர்யபவன்,

ஓல்ட் என்.ஹெச்,

திருவள்ளுவர் நகர்,

தென்பதி,

சீர்காழி - 609 111.

 

4.மங்கள விலாஸ் ஹோட்டல்,

தென்பதி,

சீர்காழி.

 

5.கணேசன் ஹோட்டல்,

சீர்காழி.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

 

1.சம்பூர்ணா ரெஸ்டாரன்ட்,

ஓல்ட் என்.ஹெச்,

தென்பதி,

சீர்காழி - 609 110.

 

2.கார்டன் ரெஸ்டாரன்ட்,

தென்பதி,

சீர்காழி - 609 110.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
ஸ்வேதரன்யேஸ்வரர்
3.9km

சட்டைநாதர் 
12.7km

வைத்தீஸ்வரன்கோவில் 
14.1km
தேவாதிராஜன் 
15.4km
லக்ஷ்மிபுரீஸ்வரர் 
16.4km