அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில்

சுவாமி மலை, கும்பகோணம்

Swamimalai_temple


சுவாமி: அருள்மிகு சுவாமிநாத சுவாமி

அம்பாள்: வள்ளி, தெய்வானை

மூர்த்தி: விநாயகர்,தாரகாபரமேஸ்வர்,சுந்தரேஸ்வரர்,மீனாட்சி, லட்சுமி,சரஸ்வதி,வள்ளி,தெய்வானை.

தீர்த்தம்: வஜ்ரதீர்த்தம்,குமாரதாரை தீர்த்தம்,சரவண தீர்த்தம்,நேத்திர புஷ்கரணி,பிரம்மதீர்த்தம்.

தலவிருட்சம்: நெல்லி மரம்

தலச்சிறப்பு: திருமுருகாற்றுப்படையால் பாடப்பட்ட அறுபடை வீடுகளுள் நான்காவது,சுவாமிமலை. சிவ பெருமானுக்கு திருமுருகன் பிரணவப் பொருளை உபதேசித்த தலம். சுவாமிநாத சுவாமி இடது கையை தொடையில் வைத்தும்,வலது கையை தண்டத்துடன் நின்ற திருக்கோலம். பீடம் சிவலிங்கத்தின் ஆவுடையராகவும் இருக்கும். இங்கு தமிழ் வருட தேவதைகள் 60 படிகளாகஅமைந்துள்ளன. சுவாமி நாதசுவாமி சன்னதிக்கு நேரில் யானை வாகனமாக உள்ளது.இது தேவேந்திரனால் வடிவமைக்கபட்ட ஐராவதமாகும். இது கோயிலின் தொன்மையைக் காட்டுகிறது.வாரந்தோறும் வியாழக்கிழமை மாலையில் வைரவேல் மற்றும் தங்க கவசமும்,செவ்வாய்க்கிழமை மாலையில் சொர்ண புஷ்ப சகஸ்ர நாம மாலையும் சாத்தபடுகிறது.

வழிபட்டோர் : நான்முகன், பூமகள், இந்திரன், சோழமன்னன், வரகுணபாண்டியன் சுகர்பிரகதீஸ்வரர், சரவணன், சுமதி.

பாடியோர்: நக்கீரர்–திருமுருகாற்றுபடை,அருணகிரிநாதர்-திருப்புகழ்தியாகராஜ தேசிகர் –நவரத்தின மாலை ,கபிஸ்தலவேலய்யர்-திருஏரக எமக அந்தாதி.

நடைதிறப்பு: காலை 6 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

பூஜை விவரம்: ஆறு கால பூஜை

திருவிழாக்கள்: சித்திரை-பிரம்மோற்சவம்(10நாட்கள்)தேர்த் திருவிழா,

வைகாசி –விசாகப் பெருவிழா,

ஆவணி-பவித்ரோற்சவம்(10நாட்கள்),

புரட்டாசி –நவராத்திரி விழா(10 நாட்கள்),

ஆடி –கிருத்திகை அன்று தெப்பக் காட்சி,

ஐப்பசி –கந்த சஷ்டிப் பெருவிழா (சூரசம்ஹாரம் விழா) ,

கார்த்திகை –திருகார்த்திகை பெருவிழா(தீபக்காட்சி),

மார்கழி –திருவாதிரைத் திருநாள். தனுர்மாத பூஜை ,

தை-பூசப் பெருவிழா,

பங்குனி உத்திரம்-வள்ளித் திருகல்யாண விழா,தமிழ்,ஆங்கில புத்தாண்டு முதல்நாளில் படிவிழா.

அருகிலுள்ள நகரம்: கும்பகோணம்

கோயில் முகவரி: அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில்,சுவாமிமலை –அஞ்சல்-612 302,கும்பகோணம் வட்டம் ,தஞ்சாவூர் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் அழகு 24,

சன்னதி ஸ்ட்ரீட்,

சுவாமிமலை - 612 302,

Ph : +91-99449-09579. 

 

2.இன்டிகோ சுவாமிமலை வில்லா,

6/30 பி ஆக்ராஹரம்,

பாபுராஜபுரம் (போஸ்ட்),

கும்பகோணம் - 612 302.

 

3. ஹோட்டல் சரவண பவன் 25பி & 25சி,

ஜீவரத்தினம் மளிகை,

கிரௌன் தியேடர் அருகில்,

டெய்லி தந்தி அருகில்,

ஆற்காடு ரோடு,

வேலூர் - 632 004.

Ph : 0416 221 7433.

 

4.ஓ.வி.எம் ரிசோர்ட்ஸ் கும்பகோணம்,

கும்பகோணம்.

 

5.வெங்கடராமன் ஹோட்டல்,

கர்ண கொள்ளை ஆக்ராஹரம்,

வலயபேட்டை ஆக்ராஹரம்,

கும்பகோணம்.

அருகில் உள்ள உணவகங்கள் :

1.ஸ்ரீ ஆதி கணேஷ் பவன் பியூர் வெஜிடேரியன் ஹோட்டல்

எண் 32, சன்னதி ஸ்ட்ரீட்,

சுவாமிமலை,

கும்பகோணம் - 612 302,

Ph : +(91)-9443161929, 7598578257.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


ஆதிகம்பட்டவிஸ்வநாதர் 
6.7km

ராமசுவாமி கோவில் 
6.7km

சோமேஸ்வரர் 
6.7Km

ஆதிகும்பேஸ்வரர்
6.6km

ஐரவதேஸ்வரர்
5.4km

வீரபத்ர ஸ்வாமி
7.8km