அருள்மிகு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில் 

ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

 Namapureeshvarar

சுவாமி : நாமபுரீஸ்வரர்.

அம்பாள் : தர்மசம்வர்த்தினி அம்பாள்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : இவ்வாலயத்தில் லிங்கோத்பவர் ஸ்தானத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயர்க்கும் தனிக்கோவிலும், அதன்  எதிர்புறம் மகாலட்சுமி சன்னதியும் தனிக் கோவிலாக இருப்பது சிறப்புக்குரியது. இந்த ஆலயத்தில் சிவனையும்,  விஷ்ணுவையும் வணங்கி பயன் அடைகிறார்கள்.  இந்த ஆலயத்தில் சனி பிரதோஷத்தை விடவும், புதன்கிழமை வரும் பிரதோஷம்  மிக சிறப்பானது.  பிரதோஷ காலத்தில் வழிபடும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரை தரிசிக்கலாம்.  புதனுக்கு, சனிஸ்வரனுக்கு ஆதிதேவதையாக மகாவிஷ்ணு அமைந்து உள்ளதால் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினால் சனி, புதன் கிரகதோஷங்கள்  நீங்கப்பெறுகிறது.

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 25-ம் தேதி முதல், தை மாதம் 10ம் தேதி வரை அதிகாலை 6.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் சிவபெருமானை சிவபூஜை செய்கின்ற அற்புதமாக காட்சி அளிக்கிறது.  அந்த அற்புத நிகழ்வை  மூன்று நிமிடமே காணலாம். 

தல வரலாறு : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள(சிவன் கோவில்) ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரிஸ்வரர் திருக்கோவில் 700 ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த புகழ் பெற்ற திருக்கோவிலாக திகழ்கிறது.  இக்கோவில் 1305-ல் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.  இந்த சிவாலயத்தில் 35 கல்வெட்டுகள் உள்ளன.  சோழ மன்னராலும் சமரசம்  செய்து கொண்டு கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  அதே போல் சோழர் கால பாண்டியர் கால கல்தூண்கள் இணைத்தே காணப்படுகிறது.  காசி புராணத்தில் இவ்ஆலயத்தை பற்றிய செய்திகள் இருப்பதாக கல்வெட்டு  ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  அதற்கு ஏற்றார் போல் ஆலயத்தின் தலவிருட்சம் காசி வில்வம் விளங்குகிறது.  இந்த ஆலங்குடி  பழைய பெயர் கிடாரம் கொண்ட சோழபுரம் என்றும், மற்றொரு பெயர் பேரூர் ஆண்டாள் என்றும் அழைக்கப்பட்டு இருப்பதாக  கல்வெட்டில் தெரிகிறது.  இக்கோவில் தை மாதம் 14ம் தேதி 28-1-2007 மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

கோயில் முகவரி : அருள்மிகு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில்,

ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

தொலைபேசி  எண் : 99767 92377.

அருகில் உள்ள தங்கும் இடம்:

1.சிதம்பர விலாஸ்,

செட்டிநாடு, ராமநாதபுரம்,

கடியாபட்டி, புதுகோட்டை - 622 505,

Ph :095855 56431.

2.சாரதா விலாஸ் ஹெரிடேஜ் ஹோம் இன் செட்டிநாடு,

832 மெயின் ரோடு, கொத்தமங்கலம்,

காரைக்குடி வட்டம் - 630 105.

3.ஹோட்டல் சத்யம்,

1 சத்தியமூர்த்தி ரோடு, புதுகோட்டை,

புதுகோட்டை - 620 008.

4.விசாலம்,

7/1 - 143, லோக்கல் பன்ட் ரோடு,

கனடுகத்தான் - 630103

அருகில் உள்ள உணவகள்:

1.அப்புஸ் குரிஸ் பேமிலி ரெஸ்டாரன்ட்,

No: 5/p, பூங்கா நகர், ராஜகோபாலபுரம்,

ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாரத ஸ்டேட் வங்கி எதிரில்,

புதுகோட்டை - 622 003, Ph : 04322 261 541

2.ஸ்ரீ ஐஸ்வர்யா ரெஸ்டாரன்ட்,

மார்த்தண்டபுரம்,

புதுகோட்டை - 622 001.

  1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்
 பிடாரி அம்மன்
11.9km

பிரகதாம்பாள்
22.8km

அரங்குளநாதர்
12.3km
ஜெயவிளங்கி அம்மன்
21.4Km
சுந்தர சுவாமிகள்
21.8Km
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
21.7km