அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்

திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

 

sri-amirthakadeshvarar_temple


சுவாமி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் சுவாமி.

அம்பாள் : அருள்மிகு அபிராமி அம்மை.

மூர்த்தி : கால சம்ஹாரமூர்த்தி, கள்ளவாரண பிள்ளையார், எமன், மார்க்கண்டேயர், நடராசர், குங்கிலியக்கலய நாயனார். 

தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், சிவகங்கை.

தலவிருட்சம் : வில்வம்.

தலச்சிறப்பு : பிரம்மா ஞான உபதேசம் பெற்றது.  சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹரித்தது.  பூமாதேவிக்காக அனுக்கிரகம் செய்தது.  ஸ்ரீ அபிராமி பட்டருக்காக ஸ்ரீஅபிராமி தை அமாவாசையைப் பௌர்ணமியாக்கியது.  ஸ்ரீமார்க்கண்டேயர் வேண்டுகோளின்படி திருக்கடவூர் மயானத்தில் கங்கா தீர்த்தம் வந்தது.  இத்திருக்கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேக வைபவங்கள் தினம் நடைபெறுகின்றன.  தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் 60 ஆம் கல்யாணம் (மணிவிழா) நடத்த இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.  59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள்.  60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள்.  70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள்.  81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள்.  அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) செய்து கொள்ள இக்கோவிலுக்கு வருகிறார்கள்.

வழிபட்டோர் : அகத்தியர், புலத்தீஸ்வரர், வாசுகி, துர்க்கை, பிரம்மன், எமன், மார்க்கண்டேயர், காரிநாயனர், குங்கிலியக்கலய நாயனார்.

பாடியோர் : சம்பந்தர், அப்பர், சுந்தரர், அபிராமி பட்டர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் : 

சித்திரை மாதம் பிரம்மோற்சவம்: 18நாட்கள், 

கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் 1008 சங்காபிஷேகம் நடை பெறும், 

ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம்,

புரட்டாசி மாதம் நவராத்திரி விழா.

அருகிலுள்ள நகரம் : மயிலாடுதுறை.

கோயில் முகவரி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், 

திருக்கடையூர் அஞ்சல் - 609 311, தரங்கம்பாடி வட்டம்நாகப்பட்டினம் மாவட்டம்.

தொலைபேசி எண் :04364 - 287429.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் கனகாபிஷேகம்,

எண் 6, சன்னதி ஸ்ட்ரீட்,

திருக்கடையூர் - 609 311,

Ph : +91 4364 287191 / 92 / 93.

 

2. ஹோட்டல் சதாபிஷேகம்,

#6/18A, சன்னதி ஸ்ட்ரீட்,

திருக்கடையூர்,

நாகப்பட்டினம் - 609 311,

Ph : +91 - 4364 - 287413, 287513, +91 - 97894 97762.

 

3. ஹோட்டல் மூகாம்பிகை ரெசிடென்சி அபிராமி ரெஸ்டாரன்ட்,

திருக்கடையூர் தரங்கம்பாடி தாலுகா,

நாகப்பட்டினம் - 609311

Phone; 04364-287515;

4. அபிராமி ரெசிடென்சி,

மேல வீதி,

திருக்கடையூர் - 609 311,

Ph : 04364 287065, 287066, 98840 87065, 94449 27650.

 

5.ஹோட்டல் மணிவிழா,

சன்னதி ஸ்ட்ரீட்,

திருக்கடையூர் - 609 311,

Ph : 04364 287 840.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. அபிராமி ரெஸ்டாரன்ட்,

திருக்கடையூர் மெயின் ரோடு,

தரங்கபாடி தாலுகா,

நாகப்பட்டினம் - 609 311,

Ph : 04364-287515; 287748;287749;287750, +91- 9364387750.

 

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

கேது ஸ்தலம் 
14.4km

புதன் ஸ்தலம் 
16.8km

வைத்தீஸ்வரன்
22.3Km

ஆதிசேஷ தீர்த்தம் 
42.6km

சுயம்பு நாதர் 
36.5km

லலிதாம்பிகை 
38.7km