அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்

நாமக்கல்

Narasimmar-Namagiri-Amman_temple


சுவாமி : அருள்மிகு லட்சுமி நரசிம்மர்.

தலச்சிறப்பு :

ஸ்ரீ நாமகிரித் தாயாரின் சிறப்பு: இங்கு அமைந்துள்ள அரி நாமகிரித் தயார் மேற்கிலிருந்து கிழக்கு  நோக்கி ஸ்ரீ நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.  இங்குள்ள  நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி தாயாரை பூஜிக்க சகல செல்வங்களும், பில்லி, சூனியம் போன்றவை  ஒரு மண்டல காலத்திற்குள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.  இத்திருக்கோயிலின்  பெயராலேயே திருவரைக்கல் எனப்படும் நாமக்கல் நாமகிரி என முன்பு புராணங்களில்  கூறப்படுகிறது.

ஸ்ரீ நரசிம்மர் சிறப்பு: இத்திருக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது.   இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர்  வீற்றிருக்கிறார்.  அருகில் பூஜக முனிவர்களான சநக சநந்தர்களும், சூர்ய சந்திரர்களும் கவரி வீச  வலது புறம் ஈஸ்வரனும், இடதுபுறம் பிரம்மாவும் பகவான் இரணியனை அழித்த உக்கிரம் தீர  வழிபடுகிறார்கள்.  ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்தால் மகிழ்ந்ததால் இங்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என  அழைக்கப்படுகிறார்.  பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகியோர் ஒரே இடத்தில் அருள் பாலிப்பதால்  மும்மூர்த்தி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது.  இங்கு இரணியனை வதைத்த பின் ரத்தக்கரையுடன்  கூரிய நகங்களுடன் பகவான் காட்சி தருகிறார்.  உலகில் சிவன் சில இடங்களில் மட்டுமே  தலையில் பிறைச்சந்திரனுடன் காட்சி தருகிறார்.  அவற்றில் ஒன்று இத்திருத்தலம்.

தல வரலாறு : தேவ சபையில் சகல குணம் பொருந்தியவர் மகா விஷ்ணுவே என்ற கருத்து  இருந்தது. அதனையொட்டி துர்வாச முனிவரிடம் வணங்கி தேவேந்திரன் விளக்கம் கேட்டார்.   துர்வாச முனிவர் ராஜகோலத்தில் பிரம்மாவும், மஹாலட்சுமியும் தமஸா உலகின் ஸ்ரீ  மகாவிஷ்ணுவும், பரமேஸ்வரியும் தோன்றியதாக கூறினார்.  மேலும் சரஸ்வதியை நான்முகனும்,  ஈஸ்வரியை ஈஸ்வரனும், லட்சுமியை மகாவிஷ்ணுவும் மணந்ததாக கூறினார்.  சகலவிதமான  பொறுமையுடன் ராஜ கோலத்தில் பிறந்த மஹாலட்சுமியை வகித்து உலகத்தை  காப்பாற்றி  வருவதால்  மகாவிஷ்ணுவே சிறந்தவராவார் எனக் கூறினார் துர்வாச முனிவர்.  இதைக்  கேட்ட  இந்திரன் இதனை பரீட்சை மூலம் அறிய நினைக்கிறேன் என்றார்.

பகவானை மனதில்  தியானித்து துர்வாசர் சத்ய லோகம் சென்றார்.  அங்கு மகாவிஷ்ணு  நித்திரையில் இருத்தார்.  துர்வாச முனிவரின் வேகத்தை கண்ட துவார பாலகர்கள் அவரைத்  தடுக்கவில்லை.  தான் வந்தும் மகாவிஷ்ணு நித்திரையில் இருப்பதைக் கண்டவுடன்  மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி  உதைத்தார். மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல்  சாந்தமுகத்துடன் முனிவரை பார்த்து தாங்கள்  உதைத்ததால் மார்புபகுதி புனிதம் அடைந்ததாகவும்  தங்கள் பாதம் வலிக்குமே எனக்கூறி  முனிவரின் பாதத்தை வருடினார்.  உடனே துர்வாசர்  தெளிவடைந்து மகாவிஷ்ணுவிடம் பிழை  பொருந்தருளுமாறு கேட்டார். 

இட்டபணியை செய்யத்தவறிய துவார பாலகர்களை மூன்று பிறவிகள் எடுத்து (தமக்கு விரோதமாக) இருப்பிடம் அடைவீர் என தன்டனை கொடுத்தார்.  பகவானை பிரிய மனமற்ற துவார பாலகர்களை கட்டளைப்படி மூன்று பிறவிகள் விரோதமாக பிரிக்கிறோம்.  ஆனால் தங்களாலேயே மரணம்  அடைய வேண்டும் என வேண்ட, இறைவனும் அவ்வாறே வரம் தந்தார்.  அவர்கள் அரக்கன்  மதுகைடகர் போல் துவார பாலகர் இருவரும் இரணியகசிபு மற்றும் இரண்யாட்ஷன் ஆக பிரிந்து  இரண்யாட்ஷன் பூமியை அபகரித்து பாதாளத்தில் ஒளிந்து கொள்ள மகாவிஷ்ணு யக்ஞவராக  அவதாரம் எடுத்து வதம் செய்து பூமி தேவியை காப்பாற்றினார்.

இரண்யகசிபு கடும் தவத்தை மேற்கொண்டு பரம சிவனிடமிருத்து 5௦ கோடி ஆட்களையும் தேவர்,  மானுடர், ஜலம், அக்னி, விஷம், ஆயுதங்கள் இவைகளாலும் பூமி, ஆகாயம், பகல், இரவு  வேளைகளில் சாகா வரம் பெற்றார்.  பரமேஸ்வரனின் வரத்தால் மூவுலகையும், முனிவர்களையும்,  தேவர்களையும், மனிதர்களையும் ஆண்ட இரணியன் ஆட்சியில் எவ்விதயாகமும், பஜனைகளும்  நடைபெறவில்லை. இதனைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர்  சக்கரத்தாழ்வாரை பிரகலாதனாக இரண்யன் மகனாக பிறக்க கட்டளையிட்டார்.  கருவிலேயே  நாரதரால் அனைத்தும் கற்ற பிரகலாதனை தக்க வயதில் குருகுலத்திற்கு இராணியன்  அனுப்பினான்.

இராணியன் கட்டளைப்படி இராணியாய நமக என ஆசிரியர் முதலடி போதிக்க அவன் "ஓம் நாமோ நாராயணாய நமக" எனக் கூறினான்.  அதன்படி இரணியனிடம் ஆசிரியர் கூற.  பலவகைகளிலும்  தண்டித்து முயற்சித்து பார்த்தான் இரணியன்.  கொடுமையான தண்டனைகள், கொலை முயற்சிகள்  கூட பிரகலாதனை புஷ்பங்களாக மாறி தர்மம் மற்றும் மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் ஆகியன  காத்தன. இதனைக் கண்ட இரணியன் பிரகலாதனிடம், வேண்டுமானால் நாராயணனை எனக்கு  காட்டு, எனக் கூற பிரகலாதன் எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறினான்.

அப்பொழுது அங்குள்ள தூணை இரணியன் அடிக்க அங்கிருந்து நரசிம்மமூர்த்தி  காட்சியளித்தார்.  அவன் பெற்ற வரங்கள் மாறுபடாமல் இரணியனை தன் சிங்க நகம் போன்ற கூரிய நகத்தால்  அவனை அழித்தார். அப்படியும் கோபம் அடங்காத ஸ்ரீ நரசிம்ம அவதார மூர்த்தியான ஸ்ரீமந்  நாராயணனை சாந்தப்படுத்த மகாலட்சுமியை தேவர்கள் வேண்ட அவளும் அருகில் செல்ல  பயந்தாள்.  பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்ய, ஸ்ரீ நரசிம்மர்  ராஜ்யபட்டாபிஷேகம் செய்து அருள்பாளித்தார் அவனும் அது முதல் பூஜித்து வரலானான்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00  மணி வரை.

திருவிழாக்கள் : நரசிம்ம ஜெயந்தி.

அருகிலுள்ள நகரம் : நாமக்கல்.

கோயில் முகவரி : அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,

நாமக்கல் - 637 403, நாமக்கல் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

 1. சானு இன்டர்நேஷனல் ஆதிரை ரெஸ்டாரன்ட்,

280/158, சேலம் மெயின் ரோடு,

நாமக்கல் - 637 001,

Ph : +91-4286-276030, 276040, +91-9500978831, +91-9500989850.

 

2. ஹோட்டல் ராதா பிரசாத்,

அண்ணா சிலை அருகில்,

திருசெங்கோடு - 637 211,

Ph : 04288 - 255510, 255560, 097155 69000, 097888 34567.

 

3. தி கோல்டன் பேலஸ்,

திருச்சி மெயின் ரோடு,

நாமக்கல் - 637 001,

Ph : +(91)-4286-228511, +(91)-9500979572.

 

4. ஹோட்டல் வாங்கிலி இன்டர்நேஷனல்,

திருச்சி ரோடு,

நாமக்கல்,

Ph : +(91)-4286-232777, +(91)-7598376424.

 

5. ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சி திருசெங்கோடு ரோடு,

நள்ளிபாலயம் என்.ஹெச் - 7 பய்பாஸ்,

நாமக்கல் - 637 003,

Ph : +(91)-4286-280058, +(91)-9629946421.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

 

இருக்குமிடம்
  

 

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

அர்த்தநாரீஸ்வரர்
37.4km

நாமக்கல் ஆஞ்சநேயர் 
110m

வேதநாராயணபெருமாள்
35Km
நவநீதகிருஷ்ணன்
34Km
அனலாடேஸ்வரர்
34.5km

அங்காளபரமேஸ்வரி 
34.3km