அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில்

குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்

kutralanathar_temple

 

சுவாமி : அருள்மிகு திருக்குற்றாலநாதர்.

அம்பாள் : அருள்தரும் குழல்வாய்மொழி.

தீர்த்தம் : சிவமது கங்கை தீர்த்தம் (பேரருவி).

தலவிருட்சம் : குறும்பலா மரம்.

தலச்சிறப்பு : திருக்குற்றாலநாதர் கோயிலில் மொத்தம் 89 கல்வெட்டுக்கள் வடிக்கப்பட்டுள்ளன.  சோழ மன்னன் பரகேசரிவர்மன் என்ற முதலாம் பராந்தகன் காலத்தில் (கி.பி.927-943) வடிக்கப்பட்ட  10 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.  முதலாம் பராந்தகச் சோழனின் கல்வெட்டு பாண்டிய  நாட்டில் திருக்குற்றாலநாதர் கோயிலில் மட்டும் தான் காணப்படுகிறது.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் பிருது என்ற மன்னன் அப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். அப்போது பிரகஸ்பதி வம்சத்தில் வந்த சுருசி என்பவன் நாடு முழுவதும் சிவ நிந்தனை செய்து  வந்தான். பிருகு மன்னன் மனம் வருந்தி சிவபெருமானிடம் நாட்டில் சிவபக்தியை நிலை நாட்ட  சிவனருள் புரிய வேண்டும் என்று வேண்டினான்.  சிவபெருமானும் “தென்னாட்டிற்கு அகத்தியர் வந்துள்ளார், அவர்மூலம் சிவபக்தியை நிலைபெறச் செய்வோம்” என்று அருளினார்.   சிவபொருமானின் கட்டளைப்படி அகத்தியர் செண்பக வனமான திருக்குற்றாலம் வந்தார்.  அங்கிருந்த விஷ்ணுவின் கோயிலுக்குள் செல்ல முயன்றார். சிவச் சின்னங்களோடு கோயிலுக்குள்  நுழைய முயன்ற திருக்குற்றாலநாதர் சுவாமி கோயில், முதலில் வைணவ கோயிலாக இருந்தது.   அகத்திய முனிவர் வருகைக்குப் பின், பெருமாளே “குறுக்கி குறுக்கி” குற்றாலநாதருக்கு  மாற்றினார், என்பது புராணச் செய்தி.  ஆகையால் குற்றாலநாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும், அதைப் போக்க தினசரி காலசந்தி அபிஷேகத்தின் போது 64 மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.  மேலும் அர்த்தசாம  பூசையின் போது மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து இறைவனுக்கு நெய்வேத்தியமாக  படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.  ஆதியில் இத்திருக்கோயில் வைணவத்தலமாக  இருந்ததை உணர்த்தும் வகையில், இக்கோயில் சங்கு வடிவத்தில் அமையப்பெற்றுள்ளது.  சங்கு  வடிவம் பெருமாளுக்கு உகந்ததாகும்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

ஆடி அமாவாசையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது,

நவராத்திரியில் பராசக்திக்கு 10 நாள் திருவிழா,

ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்,

மார்கழி திருவாதிரை,

தை மகத்தில் தெப்போற்ஸவம் பங்குனி உத்திரம்,

ஆடி அமாவாசை அன்று கோயில் முழுதும் 1008 தீபம் ஏற்றும், "பத்ரதீப" விழா இங்கு வெகு விமர்சையாக நடக்கும்.

அருகிலுள்ள நகரம் : தென்காசி.

கோயில் முகவரி : அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில்,

குற்றாலம் - 627 802, திருநெல்வேலி மாவட்டம்.

தொலைபேசி எண் :+91 - 4633 - 283 138, 210 138.

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1.ஸ்ரிஸ்டி கார்டன் ரிசோர்ட்ஸ்,

145, ஓல்ட் குற்றாலம் தென்காசி,

குற்றாலம் - 627 814.

 

2.குற்றாலம் இசக்கி ரிசோர்ட்ஸ்,

பய்வ் பால்ஸ் மெயின் ரோடு,

குற்றாலம் - 627 802.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

இளஞ்சி முருகன் 
3km

காசி விஸ்வநாதர் 
5.9km
சங்கரன்கோவில்
50.4km

நெல்லையப்பர்
57.4km

ஸ்ரீவைகுண்டநாதர் 
86.4km

விஜயசனபெருமாள்
88.2km