அருள்மிகு வைகுந்தநாத சுவாமி திருக்கோவில்

ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்

Srivaikundam_temple

சுவாமி : வைகுந்தநாதன்.

அம்பாள் : வைகுண்டவல்லி, பூதேவி.

தீர்த்தம் : பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி.

விமானம் : சந்திர விமானம்.

தல வரலாறு : பிரம்மன் எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளையம் ஏற்பட்டு  எங்கும் நீர் சூழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவன்  வைத்திருந்த (சிருஷ்டி ரகசிய கிரந்தம்) படைப்பு தொழில் பற்றி கசிய ஏடுகளை ஒளித்து வைத்துக்  கொண்டான்.  தன் நிலை வருந்திய பிரம்மன் அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு  விஷ்ணுவை குறித்து தவம் செய்ய எண்ணி தன் கையில் உள்ள பிரம்ம தண்டத்தை பெண்ணாக்கி  தவம் செய்யும் இடத்தை அறிந்து வரச் சொன்னார்.

அந்த பெண்ணும் தாமிரபரணி ஆற்றங்கரையில்  சோலைகள் நிறைந்த இடத்தை தேர்வு செய்து கூற பிரம்மன் அங்கு வந்து கடுந்தவம் செய்து  திருமால் நேரில் அங்கு வந்து பிரம்மனை வாழ்த்தி  இழந்த ரகசியத்தை மீட்டுக் கொடுத்தார்.  திருமாலிடம் பிரம்மன் தனக்கு காட்சி கொடுத்து நின்ற  திருக்கோலத்தில் இங்கு வைகுண்டநாதனாக  காட்சியளிக்க வேண்டும் என வேண்ட அவரும்  சம்மதித்தார்.  மூல விக்கரகத்தை பிரம்மனே  பிரதிஷ்டை செய்து தன் கமண்டத்திலேயே நீர்  எடுத்து திருமஞ்சனம் செய்து கலசத்தை  நதிக்கரையில் பிரதிஷ்டை செய்தல் தீர்த்தம் கலசதீர்த்தம்  எனப்படுகிறது.

கால தூஷகன் என்னும்  திருடன் ஒருவன் இப்பெருமானை வழிபட்டு திருடச் செல்வானாம்.  திருடிய செல்வத்தில் பாதியை  பெருமாளுக்கு காணிக்கையாகவும் தருவான்.  இவன் கூட்டத்தினர் அரண்மனையில் திருடுகையில் பிடிபடும் பொழுது கால தூஷகன் வைகுண்ட நாதனிடம் சரண்  அடைந்து தன்னை காக்குமாறு வேண்ட பெருமாளே காலதூஷகன் வேடத்தில் எதிரில் வர,  காலதூஷகனை அரசன் பார்த்த போது தன் சுயரூபத்தை காட்டியருள, அடிபணிந்து நின்ற மன்னன்  தன்னிடம் கொள்ளையடித்து செல்ல வேண்டிய காரணம் கேட்க தர்மம் காக்காத உன்னை தர்மத்தில்  ஈடுபட செய்யவே நான் வந்தேன் என்றார்.  அரசனும் தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கும்  கிடைக்க உற்சவ மூர்த்தியை கள்ளபிரான் என்று கூறி வழிபடலானார்.

இக்கோவிலின் அமைப்பு முழுவதும் சில காலத்திற்கு முன் பூமியில் புதையுண்டு போனது, பின்னர் மணப்படை வீட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னனின் பசுக்களை இங்கு ஓட்டி  வந்து மேய்ப்பது வழக்கம்.  இதில் ஒரு பசு மட்டும் தனித்து பெருமாள் பூமியில் மறைந்து உள்ள  இடத்தில் பால் சொறிவதை வழக்கமாக கொண்டிருந்தது.  இதனை மேய்ப்பவன் மன்னனிடம் கூற  மன்னன் தனது பரிவாரங்களுடன் அங்கே வந்து மணலை அகற்ற அங்கே வைகுண்ட பெருமாள்  சன்னதியை கண்டு ஆனந்தித்து இப்பொழுதுள்ள கோவிலை அமைத்தார்.

இத்தலத்தில் பெருமாளை சூரிய ஒளி ஆண்டிற்கு இருமுறை சித்திரை 6, ஐப்பசி 6 ஆகிய நாட்களில்  காலைக் கதிரவன் பெருமான் பாதத்தை தரிசித்து செல்கிறான்.  இதற்காக கொடி மரம் சற்று தெற்கே  விலகி அமைக்கப்பட்டள்ளது.  இப்பொழுதுள்ள கோபுரம் சந்திர குல பாண்டியனால் கட்டப்பட்டது.   வீரப்பன் நாயக்கர் காலத்தில் கொடி மரமும், சந்தான சபாபதி காலத்தில் மண்டபமும்  அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கலை அம்சம் உள்ள கோவில் இங்கு உள்ள உற்சவர்  திருமேனியை உருவாக்கிய சிற்பி இவர் அழகில் மயங்கி கன்னத்தில் கிள்ள சிற்பியின்  ஆத்மாத்தமான அன்பின் அடையாளத்தை கன்னத்தில் வடுவாக ஏற்றுக் கொண்டார்.  இன்றும் இந்த  வடுவை உற்சவரிடம் காணலாம்.

நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல்  இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

கோயில் முகவரி : ஸ்ரீ வைகுந்தநாத திருக்கோவில்,

ஸ்ரீ வைகுண்டம்,தூத்துக்குடி மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் எம். என். ஹெச் ராயல் பார்க்,

எம். என். ஹெச் ஜிவல்லரி கேம்பஸ்,

64-D, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி 627 001,

Ph : 0462-2320404, 0462-2324617, 0462-2324618, 0462-2324619.


2. ஹோட்டல் அப்லெட் ட்ரீ,

நார்த் பய்பாஸ் ரோடு(பாலம் எதிரில்),

வண்ணாரபேட்டை,

திருநெல்வேலி 627 003,

Ph : (+91) 95 95 333 333.


3. ஸ்ரீ பரணி ஹோட்டல்,

29 - A, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627 001.


4. ஹோட்டல் எ.எ.ஆர் ராயல் பார்க், 996/1-B,

கிரீன் போரஸ்ட் பர்னிசர் மார்ட் எதிரில்,

வசந்தா நகர்,

நியூ பஸ் ஸ்டாண்ட் அருகில்,

திருநெல்வேலி 627 007,

Ph : 0462 – 2555900.


5. ஹோட்டல் எம்.என்.ஹெச் ராயல் பார்க்,

எம்.என்.ஹெச் ஜிவல்லரி கேம்பஸ்,

64-டி, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627001.

 

அருகில் உள்ள உணவகங்கள்:

1. மாருதி ரெஸ்டாரன்ட் ஸ்ரீ ஜானகிராம் ஹோட்டல்ஸ்,

மதுரை ரோடு ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627 001,

Ph : 0462-2331941.


2. ஹோட்டல் நெல்லை சரவண பவன் திருநெல்வேலி ஜங்ஷன்,

டவுன் அண்ட் பாளையம்கோட்டை,

திருநெல்வேலி - 627 001,

Ph : 0462 233 5917.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
காய்சினவேந்தன்
3km

இரட்டை திருப்பதி(ராகு)
9.8Km

இரட்டை திருப்பதி(கேது)
9.5Km
ஆதிநாத பெருமாள்
5.1Km
மாயகூத்தர்
11.9Km
விஜயசனபெருமாள்
1.8Km