அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில்

உத்தரகோசமங்கை, ராமநாதபுரம் மாவட்டம்

Utirakosamangai_temple


சுவாமி : மங்களநாதர்.

அம்பாள் : மங்களேஸ்வரி.

தலவிருட்சம் : இலந்தை மரம்.

தலச்சிறப்பு : இங்குள்ள நடராஜ சிலை மரகதத்தால் ஆனது.  வருடம் முழுவதும் நடராஜருக்கு  சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும்.  வருடத்தில் ஒரு நாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனக்காப்பு  கலையப்பட்டு மக்கள் தரிசிப்பர்.  அச்சமயம் ஆயிரக்கணக்கான மக்கள் இத்தலத்தில்  கூடுவர்.  வேதத்தின் இரகசியங்களை உமையம்மைக்கு ஈசன் அருளிய புண்ணிய திருத்தலம்.  சிவனின்  உறைவிடம் மிக பழமையானது. தாழையை சிவன் அணியும் ஸ்தலம்.  சிவனுக்கு  புனுகு  சாத்தப்பட்டு ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும்.  இக்கோவில் சிதம்பரம் கோவிலுக்கு  முன்பே தோன்றியது.  எனவே உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு.

தல வரலாறு :  முன்னொரு காலத்தில் மண்டோதரி (ராவணனின் மனைவி) உலகிலேயே சிறந்த சிவபக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என அவள் முடிவெடுத்தாள்.  ஈசனை தியானித்தாள்.   சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து,  "நான் மண்டோதரிக்கு காட்சிதர செல்கிறேன்.  திரும்பி வரும் வரை இதை பத்திரமாக  வைத்திருங்கள்,'' என கூறிச்சென்றார்.  மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார்.   அப்போது ராவணன் அந்த குழந்தை சிவன் என்பதை புரிந்து கொண்டான்.  சிவனைத் தொட்டான்.   அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி ராவணனை சோதித்தார்.  உலகில் அனைத்தும் தீப் பற்றி எரிந்தன.  சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது.   முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில்,  தீர்த்தத்தில் குதித்து இறந்தனர்.  அது "அக்னி தீர்த்தம்" என பெயர் பெற்றது.  அங்கிருந்த  மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலை காப்பாற்றினார். பிறகு ராவணனுக்கும்  மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.  மாணிக்கவாசகருக்கு தன்னைப்  போலவே லிங்கவடிவம் தந்து கவுரவித்தார்.  இப்போதும் இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

பாடியோர் : மாணிக்கவாசகர்.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைத்திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : ராமநாதபுரம்.

கோயில் முகவரி : அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை - 623 533, ராமநாதபுரம் மாவட்டம்.

தொலைபேசி எண் : 04567 221 213.

அருகில் உள்ள தங்கும் இடம்:

1.ஹோட்டல் குயின் பேலஸ்,

என்.ஹெச். ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகில்,

ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 221 013.

2.ஹோட்டல் விநாயகா,

#5, ரயில்வே பீடர் ரோடு,

ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 222 361.

3.டைவிக் ஹோட்டல்ஸ் ராமேஸ்வரம்,

என்.ஹெச் - 49, மதுரைராமேஸ்வரம் ஹைவே,

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 223 222.

4.ஹோட்டல் கரிஷ் பார்க்,

3, மதுரை ராமேஸ்வரம் ரோடு,

பாரதி நகர், ராமநாதபுரம் - 623 503.

Ph : 094423 22030.

அருகில் உள்ள உணவகள்:

1.ஹோட்டல் ஐஸ்வர்யா லக்ஷ்மி,

கிரௌண்ட் ப்ளோர், என். ஹெச் 45,

மதுரை - ராமேஸ்வரம் ரோடு, சாலை பஜார்.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

இருக்குமிடம்
  

 

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

ஜெகன்னாதபெருமாள்
10.8km

லட்சுமணதீர்த்தம்
66.7km

அனுமன் கோவில் 
66.8Km
கோதண்டராமன்
77.3Km
Ramaswamy
68.5km